பெண்களுக்கான தர்பியா

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகாஸ் தோட்டவளாகத்தில் பெண்களுக்கான தர்பியா மற்றும் தாவா ஒருங்கிணைப்பு நடைபெற்றது. மாவட்டதாயி கோவை அல்தாப் உசேன் அவர்கள் பெண்கள் தாவா செய்வதன் அவசியம் குறித்தும் தனித்தனி குழுவாக அமைத்து அனைத்து மக்களிடமும் தாவா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார். சுமார் 100 பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..   
 
 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



அல்லாஹ்வின் திருப்பெயரால்....


முஸ்லிம்களின் உயிரினும் மேலான உத்தம  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கீழ்த்தரமாகச் சித்தரித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க பாதிரியையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!.

 நாள் : 15/09/2012

இடம் : கஸ்டம்ஸ் ஆபீஸ் முத்துபேட்டை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்பிள்ளை, தந்தை, உலகமக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் யாரும் முஃமினாக (இறைநம்பிக்கையாளராக) முடியாது.   நூல் : புகாரி (15)

அநியாயத்திற்கு எதிராக அணி திரள்வோம் !!
அழைப்பது .....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


முகவை சலிமுல்லாகானுடன் பிரத்யோக பேட்டி


அல்லாஹ்வின் திருப்பெயரால்

  முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் சகோதரர்கள் தமுமுகவின் முன்னாள் மாநில செயளாளர் ராமநாதபுரம் சலிமுல்லாகனை  சந்தித்து ஒரு கலந்துரையாடல் நடத்தினர் அதை தொகுத்து அனைவருக்கும் தருகிறோம்

    அல்லாஹ்வின் திருப்பெயரால்

 சலிமுல்லாகான் அவர்களிடம் நாம் ஏன் தமுமுகவில் இருந்து விலகினீர்கள் என கேட்ட போது கொஞ்சமும் யோசிக்காமல் மன அமைதிக்காகவும் மறுமை வெற்றிக்காகவும் என தெளிவாக கூறினார்

 நீங்கள் தவ்ஹிதிர்க்கு திரும்பியதை பற்றி சொல்லுங்கள் என கேட்ட போது தவ்ஹிதிர்க்கு அல்ல புதிதாக இஸ்லாத்திர்க்கே வந்தது போல உனர்கிறேன் காரனம் அரசியல் என்ற பெயரில் இஸ்லாத்தை விட்டே விலகி போய்விட்டோம் அல்லாஹ் என் மரனத்திற்க்கு முன்பு இந்த ஹிதாயத்தை கொடுத்ததை நினைத்து மன நிம்மதி அடைகிறேன்
    
                                       தொடரும்


நன்றி 

குவைத் -அன்சாரி 

கலையிழந்த முத்துப்பேட்டை கந்தூரி தேர் திருவிழா


முத்துப்பேட்டையில் வருடா வருடம் நடைபெறும் மிகப்பெரிய இனைவைப்பான கந்தூஉரி தேர்திருவிழா இந்த வருடம் கலையிழந்தது அல்ஹம்துலில்லாஹ்
  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பிரசுரம் மூலமாகவும் ஜாமாத்களுக்கு கடிதம் மூலமாகவும் விழிப்புனர்வை ஏற்படுத்தியது. இது இஸ்லாத்திற்க்கு விரோதமானது இதர்க்கும் இஸ்லாமியர்களுக்கும் சம்மந்தம் கிடையாது போலியாக இஸ்லாத்தை பெயரை பயன்படுத்தி இஸ்லாத்திற்க்கு கலங்கத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டும் படி காவல்துரைக்கும் கோரிக்கைவைத்தது  இதற்க்கல்லாம் முத்தாய்ப்பாக ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் உரையிலும் இதன் தீமைகளை பட்டியல் போட்டு இதிலிருந்து விலக அறிவுரை சொல்லப்பட்டது
  அனைவருக்கும் ஹிதாயத் நேர்வழி கிடைக்காவிட்டாலும் நிறைய பேர்கள் அதிலிருந்து விலகி கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்னும் வருங்காலங்களில் வீரியமாக பிரச்சாரம் செய்து மீதமுள்ள் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்ச்சிப்போம் அல்லாஹ் போதுமானவன்.   

முத்துப்பேட்டையில் முஸ்லிம் தேர்திருவிழா ததஜ எதிர்ப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்

  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை சார்பாக நபிவழி பெருநாள் தொழுகை புதுத்தெருதிடலில் சரியாக காலை 7.30 மனிக்கு நடைபெற்றது ஆன்களும் பென்களும் ஆயிரக்கனகானவர்கள் கலந்து கொண்டார்கள்
  கந்தூரி என்ற பெயரில் முஸ்லிம்கள் பெருநாளைக்கு மறுநாள் தேர் இழுப்பது பகிரங்க இனைவகுப்பு இதிலிருந்து முஸ்லிம்கள் விலகவேண்டும் கந்தூரி  எடுப்பவர்களும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் குற்றவாளிதான் என்று குர் ஆன் வசனத்தை மேர் கோள்காட்டி சனிக்கிழமை அல்லாஹ் மீன்பிடிக்க விதித்த தடையை மீறி மீன் பிடித்தவர்களுக்கும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களுக்கும் அல்லாஹ் தண்டனை கொடுத்து அவர்களை குரங்காக மாற்றியதை சுட்டி காட்டி இந்த கந்தூரி தேர் இழுப்ப்ழ்வர்களையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களையும்  அல்லாஹ்  தண்டிப்பான் அதில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்து கோவை அல்தாப் உசேன் அவர்கள் குத்பாஉரையாற்றினார்கள்.அனைவரும் அமைதியாக அமர்ந்து உரையை செவிமடுத்தார்கள்.இந்த உரையை பார்க்க  www.tntjmtt.blogspot.com

முத்துப்பேட்டையில் முஸ்லிம் தேர்திருவிழா ததஜ எதிர்ப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

 முத்துப்பேட்டையில் நடக்கும் பகிரங்க இனைவைப்பான கந்தூரி தேர் திருவிழாவை தடுத்து நிறுத்த முயற்ச்சி செய்ய வழியுருத்தி அனைத்து முஹல்லா நிர்வாகத்திர்க்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது 

 பிற அமைப்புகளும் இது போல எதாவது செய்து அந்த கந்தூரி திருவிழாவை தடுக்க முயற்ச்சிக்கலாமே? அல்லாஹ் திருக்குரானிலே அந்த சனிக்கிழமை தடையை மீறி மீன்பிடித்த கூட்டத்தை பற்றி கூறும்போது மீன் பிடித்தவர்களையும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர்களையும் நாம் தண்டித்தோம் என்று சொல்கிறான் ஆகையால் இந்த பகிரங்க இனை வைப்பை வெறுமனே வேடிக்கை பார்க்காமல் நம்மால் இயன்ற அளவு அதை தடுக்க முயற்ச்சி செய்து அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து நம்மை காத்து கொள்வோம்


உண்மை நிலை அறியாமல் உண்மைக்கு மாறாக செய்தி வெளியிடும் muthupet.org க்கு ஒரு மடல்

 

 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    தாங்கள் அனுப்பியுள்ள மெயில் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.ஒரு 

நடு நிலையாக செய்திகளை வெளியிடும் இனையதளம் என என்னை 

போன்றவர்களின் என்னத்திற்கு மாற்றமாக தாங்கள் வெளியிட்ட செய்தி

உள்ளது. ஆண்டு மலரில் உள்ள அந்த கேலி சித்திரத்தை கிழித்து விடுமாறும்

அல்லது மைகொண்டு அழித்து விடுமாறும் சொல்லப்பட்டதாக எழுதி

உள்ளீர்கள். யார் சொன்னது? நிர்வாகமா? எப்படி சொன்னார்கள் எழுத்து

பூர்வமாகவா வாய்மொழியாகவா? நான் விசாரித்தவரை அனைத்து 

பெற்றோர்களுமே அப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்று

சொல்கிறார்கள். நபிகள் நாயகத்தை பற்றி வேறு சமுதாயதை சேர்ந்தவர்கள்

இதே போல செய்து இருந்தால் சும்மா இருப்போமா? தவறு நடந்துவிட்டது

என சொல்பவர்கள் ஏன் அந்த புக்கை திரும்பபெருவதற்க்கு ஒரு 

முயற்ச்சியும் செய்யவில்லை? நாலு மாதம் கழிந்துவிட்டது என்பது ஒரு

காரனமா?  நாலுமாதம் கழிந்துவிட்டால் எதுவும் கேட்ககூடாதா? எந்த 

ஒன்றை சொல்லும்போதும் நடுநிலை பேனுவது அவசியம் அதிலும் 

இந்த விசயத்தில் அல்லாவை பயந்து கொள்ளுங்கள்.தினமலர் இதே

வேலையை செய்யும்போது நாம் கொதித்தோமே இப்போது நம்மை எது 

தடுக்கிரது.? நாம் அனைவரும் நேர்வழியில் நடக்க அல்லாஹ் அருள் 

புறிவானாக.
-tntjmtt mail க்கு வந்த மடல் 


உண்மை நிலை அறியாமல் உண்மைக்கு மாறாக செய்தி வெளியிடும்   muthupet.org  க்கு ஒரு மடல்


   

விகிதாச்ச்சார தேர்வு முறையை நோக்கி நமது பயனம்


முஸ்லிம்கள் ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செழுத்த, அநியாயகார கட்சிகளின் காலில் விழுந்து கிடக்காமல் தன்மானம் காக்க, நமக்குதேவை அரசியல் அதிகாரத்தி தனி ஒதுக்கீடு எப்படி தலித்துகளுக்கு ரிசர்வ் தொகுதி என ஒதுக்கியுள்ளார்களோ அதேபோல தலித்துகளைவிட மிகவும் பிதங்கியுள்ள முஸ்லிகளுக்கு தனி இட ஒதுக்கீடு அவசியம் தேவை நம் நாட்டை பொருத்தவரை எதுவுமே தன்னால் கிடைக்காது குடிக்க தன்னீர் போன்ற அத்திவாசிய தேவைகளையே போராடிதான் பெரவேண்டிய சூழ்நிலை நிலவும் நம்நாட்டில் நமக்குதேவையான அரசியல் இடஒதுக்கீடு [முஸ்லிம் தனித்தொகுதி] நாம் போராடாமல் கிடைக்காது இன்ஸா அல்லாஹ் அதற்காக போராடதயாராவோம்
    இப்போதைக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டாலும் நிரந்தர தீர்வு அதுவல்ல விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல்தல் முறைதான் நிந்தர தீர்வு .விகிதாச்சாரமுறை தேர்தல் என்றால் என்ன?நமக்கு இப்போது உள்ள தேர்தலில் 70சத்வீத மக்களுக்கு பிடிக்காத ஒருத்தன் வெரும் 30 சதவீத ஓட்டு வாங்கி ஒட்டு மொத்த மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் போக இயலும் ஒரு தொகுதியில் ஒருத்தன் [ஒருகட்சி] 30சதவீத ஓட்டு வாங்குகிறது மற்ற வேட்பளர்கள் 20 சதவீதம் 25சதவீதம் 15சதவீதம் என மீதமுள்ள 70 சதவீதத்தை பகிர்ந்து கொண்டால் 30சதவீத வாங்கியவன் வெற்றி பெற்று விட்டான் 70சதவீத மக்கள் அவனை விரும்பாவிட்டாலும் அவன் தான் அவைகளின் பிரதிநிதி இதுதான் மோசடி ஜனநாயகம் இதனால்தான் ந்ல்லவர்கள் அரசியலுக்கு வரவிரும்புவதில்லை அரசியல் அயோக்கியர்களின் கூடாரம் என்பது உன்மையாகிவிட்டது.
   விகிதாச்சாரமுறை தேர்தலில் அவரவர்களுக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவுக்கு தகுந்தமாதிரி அவர்களுக்கு பிரதித்துவம் கிடைக்கும் உதாரனமாக 30சதவீதம் ஓட்டு வாகியகட்சி 3 பேரை சட்டசபைக்கு அனுப்பினால் 20சதவீதம் ஓட்டு வாங்கியகட்சி 2பேரை அனுப்பும் வேட்பாளர் நிக்கவேண்டியதில்லை கட்சிதான் நிக்கும் அதுவாங்கும் ஓட்டுக்கு தகுந்த அளவு பிரதித்துவம் கிடைக்கும் முஸ்லிகளுக்கு யாருடைய தயவும் தேவையில்லை தமிழ்நாடு முழுவதும் அதுவாங்கும் ஓட்டின் அடிப்படயில் உறுப்பினர்களை சட்டசபைக்கு அனுப்பலாம் அவர்களும் யாருக்கும் பாப்படாமல் பேசுவார்கள் நல்ல அமைப்புகள் நல்லவர்கள் அரசியலுக்குவர இது வழி வகுக்கும் அநியாயகாரர்கள் மக்களால் ஓரங்கட்டபடுவார்கள். 
     வெறும் மூன்று சதவீதம் இருந்துகொண்டு 100சதவீத மக்களையும் அதிகாரம் செலுத்தும் ஒரு இனத்தின் ஆட்சி முடிவுக்குவரும் அனத்து மக்களும் மனம் மரியாதையோடு வாழ அனவருக்கும் அனத்தும் கிடைக்க விகிதாச்சார தேர்தலே தீர்வு இதையும் தங்க தட்டில் வைத்து யாரும் தர மாட்டார்கள் மேழிருந்து கீழ்வரை ராச்சினை செய்யும் ஒரு வர்கத்திடமிருந்து அதை மீட்டெடுப்பதுதான் விகிதாச்சார தேர்தல் முறை[ஜெர்மன் ஜனநாயகம்] இதை அடைய இன்றே சபதமேற்போம் 
-குவைத் அன்சாரி 
முத்துப்பேட்டை   

தவ்ஹீத் மணமகன் தேவையா? தவ்ஹீத் மணமகள் தேவையா?

இலவசமாக நமது இணையதளத்தில் பதிவு செய்து தகவல்களை பெற்றிடுங்கள்.
பதிவு செய்ய உங்கள் தகவல்களை tntjmtt@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்பவும்
உங்கள் விம்பரம் tntjmtt@gmail.com என்ற முகவரிகு 
jpg(or)gif File formatல் அனுப்பி வையுங்கள்